LOADING

Type to search

இந்திய அரசியல்

குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு!

Share

குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட்டவிரோத கும்பல்கள் அதிக அளவில் தயாரிப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கின. இதில் குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் கண்டுப்பிடிக்கப்பட்டன.

இதேபோல, ராஜஸ்தானின் ஜலோர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரம்மாண்டமான போதைப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகள், பிரம்மாண்டமான வேதியியல் ஆய்வகம் போல காட்சியளித்தன. 

இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான் போதைப்பொருள் தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ எடையிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகளை அமைத்து, போதைப்பொருட்களை தயாரித்து வருபவர்களை தீவிரவாத தடுப்பு படையினர் தேடி வருகின்றனர்.