LOADING

Type to search

இந்திய அரசியல்

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்தில் கிடங்கின் உரிமையாளர் கைது!

Share

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து சம்பவத்தில் குவாரியின் பங்குதாரரான சேதுராமன் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

      விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கல்குவாரியில் எதிர்பாராத விதத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர வெடி விபத்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. கல்குவாரி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடந்தன. மேலும், கல்குவாரியில் இருந்த இரண்டு வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

சில தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் அமைந்திருக்கும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த கல்குவாரியை மூடக்கோரி மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் கல்குவாரியின் பங்குதாரர் சேதுராமன் விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலையத்தில்  சரணடைந்தார். அவரிடம் ஆவியூர் காவல்துறை தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலை வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.