LOADING

Type to search

இந்திய அரசியல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பதில் சொல்லுமா? – திமுக எம்.பி. கனிமொழி சோமு கோள்வி

Share

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில்,  மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கோள்வி எழுப்பியுள்ளார்.

      கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.  24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களின் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் முதல்படியான இந்த நீட் தேர்விவை எழுதினர். இதில், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கோள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கீச்சக பதிவில் குறிபிட்டுள்ளதாவது: குஜராத்தில் 3 பேர், பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டில்லியில் 3 பேர் என நீட் தேர்வில் மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.. முறைகேடுகளை தடுக்கத்தான் நீட் தேர்வு என்று சொல்லும் பாஜக, அவர்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நடந்த இத்தகைய முறைகேடுகளுக்கு பொறுப்பேற்குமா? இத்தனை ஆண்டுகளாக நம் வீட்டு பிள்ளைகள் தகுதி இருந்தும் தங்கள் மருத்துவராகும் கனவை நனவாக்க முடியாமல் போனதற்கு மத்திய அரசு பதில் சொல்லுமா? நாங்கள் நீட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்திய போதெல்லாம் எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?