“ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயார்” – இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
Share
தெற்கு காசா மீது தரைவழி தாக்குதலை தொடங்கினால் ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயார்” என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இந்த போர் ஏறக்குறைய 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்த போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து, தெற்கு காசாவில் அமைந்துள்ள ராஃபா நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்தார்.
இது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிட வேண்டிய சூழல் உருவானால், தனித்து நிற்கவும் தயார் என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.