நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? – டிரம்ப் மறுப்பு
Share
வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சியில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. முன்னதாக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக தெற்கு கரோலினா முன்னாள் ஆளுனராக இந்திய – அமெரிக்கர் நிக்கி ஹாலேயும் முயற்சி செய்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற உதவும் பட்சத்தில், நிக்கி ஹாலேயை துணை அதிபராக நிறுத்த டிரம்ப் பரிசீலனை செய்வார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதனை மறுத்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துணை அதிபர் பதவிக்கு நிக்கி ஹாலேயை பரிசீலனை செய்யவில்லை. அவர் நலமுடன் இருக்க வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.