LOADING

Type to search

உலக அரசியல்

காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் – பலர் படுகாயம்!

Share

இஸ்ரேல் காஸாவின் தெற்கு பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக காஸா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

     இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இரு நாடுகளும் போரை கைவிடவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட, முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டது. இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இஸ்ரேலின் கடற்கரை நகரமான அஸ்கெலோனில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காஸா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஸாவின் வடக்குப் பகுதியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நேற்று நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 3 பேர் காயமுற்றதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் காஸாவின் தெற்கு பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக காஸா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.