LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 15 பேர் பலி

Share

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வகையில், ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. காலை நிலவரப்படி 15 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதுபற்றி பெல்கோரட் பிராந்திய ஆளுனர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறுகையில், “குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் முக்கிய பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் இறந்தனர். 11-ம் தேதி தாக்குதலின்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார். இதன்மூலம் உக்ரைனின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 19 பேரை இழந்திருக்கிறோம்’ என்றார்.