LOADING

Type to search

இந்திய அரசியல்

18-ம் தேதி வரை கனமழை தொடரும்.. குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

Share

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். 

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 18- ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப் பகுதிகள்), குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கலில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக வெப்பம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.