LOADING

Type to search

இந்திய அரசியல்

“காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உம்ரா பயணத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு நிரந்த தீர்வு” – ஹஜ் பயணிகளிடம் நவாஸ் கனி எம்பி பேச்சு!

Share

காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் உம்ரா பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார்.

     இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் நாளை தொடங்க உள்ள நிலையில் பயணம் மேற்கொள்வோருக்கான பயிற்சி முகாமும், வழியனுப்பும் நிகழ்ச்சியும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி குழு ஒருங்கிணைப்பு சார்பில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நவாஸ்கனி  எம்பி தெரிவித்ததாவது.. ” நீங்கள் அனைவரும் புனித பயணம் மேற்கொண்டு ஹஜ் கடமையாற்ற வேண்டும்.‌ உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் ஒரு நல்ல ஆட்சி அமையவும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய ஒரு ஆட்சி அமைய வேண்டும் என இந்த புனித யாத்திரையில் நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.” என பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்ததாவது.. ”நம்முடைய பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் பதற்றத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் சமயத்தில் பிரதமர் இஸ்லாமியர்களைப் பற்றி என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம் மன்னர்களை எல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.‌ காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் உம்ரா பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு எந்த குளறுபடியும் இருக்காது. அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். மதத்தை வைத்து மட்டுமே அரசியலை சந்திக்க முடியும் என்ற கோட்பாட்டிலே பல மாநிலங்களில் பலவிதமான பிரச்சாரங்களை பாஜகவினர் செய்து வருகின்றனர். பாஜகவின் எந்த ஒரு திட்டமும் கை கொடுக்காது. காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்று அவர்களுக்கே தெரியும். அதனால்தான் இது போன்ற பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.” என நவாஸ் கனி எம்பி தெரிவித்தார்.