LOADING

Type to search

இந்திய அரசியல்

குற்றால அருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

Share

பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், சிக்கிய மாணவனை காவல்துறை சடலமாக மீட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஐந்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். அவர்களில் 4 பேரை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டனர்.

இருப்பினும், நெல்லை பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவனை மட்டும் காணவில்லை என அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி சுரேஷ் குமார் தலைமையில் தீயணைப்புத் துறையினரும், ஆயுதப்படை வீரர்களும் ஒன்றிணைந்து மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ள தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர், மாணவனை மீட்கும் முயற்சியை தீவிரப்படுத்துமாறு காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவிக்கு சற்று தொலைவில் உள்ள இரட்டை கால்வாய் என்ற பகுதியில் தீயணைப்புத்துறையினரும், காவல்துறையும் மாணவனை சடலமாக மீட்டுள்ளனர்.