போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்
Share
தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் நாடாளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். இன்னும் சில நாட்களில் அதிபராக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட கேஎம்டி கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கேஎம்டி கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.