LOADING

Type to search

இந்திய அரசியல்

நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு..!

Share

நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆண்டு அக். 10-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு அக். 7-ம் தேதி வந்தடைந்தது. இந்த கப்பலில் பயணிக்க பயணிகளுக்கான கட்டணம் 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடமைகளை கொண்டு செல்லலாம் எனவும், இந்த பயணத்துக்கு கடப்பிதழ், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  குறைவான பயணிகள் மற்றும் சீதோஷ்ண நிலையை காரணம் காட்டி இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கப்பல் சர்வதேச போக்குவரத்திற்கு சட்டபூர்வமான அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை 3வது முறையாக தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை கப்பல் பயணத்திற்கு பதிவு செய்தவர்கள் தொகையை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.