காசாவில் 17 அமெரிக்க மருத்துவர்கள் மீட்பு
Share
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. அந்நாட்டின் எல்லை வழியே உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. இதில், இஸ்ரேலை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. 7 மாதங்களுக்கு கூடுதலாக நடந்து வரும் இந்த மோதலில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இந்த சூழலில், காசா பகுதியின் ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லை பகுதி மூடப்பட்டது. இதனால், வெளிநாட்டவர்கள் பலர் சிக்கி கொண்டனர். இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை கூறும்போது, 20 அமெரிக்க டாக்டர்கள் காசாவில் சிக்கி இருந்தனர். அவர்களில் 17 அமெரிக்க மருத்துவர்கள் மீட்கப்பட்டனர்