LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான் ராணுவத்தில் முதல் பெண் ஹெலன் மேரி பிரிகேடியர் நியமனம்!

Share

பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் முதல்முறையாக சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு ‘பிரிகேடியா்’ பதவி அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவ பிரிவில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஹெலன் மேரி ராபர்ட்ஸ்.  ராணுவத்தில் பரிகேடியர்களாக தேர்வு செய்யப்படுபவர்களால் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் பிரிகேடியர் பதவிக்கு தற்போது கிறிஸ்தவ பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார், இவரது நியமனத்திற்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கடின உழைப்பாளி பெண்கள் நாட்டிற்கு தனித்துவமாக சேவையாற்றும் பெண்கள் குறித்து முழு தேசமும் பெருமிதம் கொள்கிறது என வாழ்த்தி உள்ளார்.