வங்கதேச பிரதமருடன் சோனியா, ராகுல், பிரியங்கா சந்திப்பு
Share
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (ஜூன் 10) சந்தித்துப் பேசினர்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேபு விழாவில் பங்கேற்பதற்காக ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து டெல்லியில் அவர் தங்கியிருந்தபோது, இந்த சந்திப்பு நடைபெற்றது.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.
ஹசீனாவுக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையிலான உறவு அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச தலைவருமான ஷேக் முஜிபூர் ரஹ்மான், இந்திரா காந்தியுடன் இணக்கமான சுமூகமான உறவைக் கொண்டவர்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் இந்திரா காந்தி வங்கதேசத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தார். பாகிஸ்தானுடன் போரிட்டு கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்க தேசத்தை தனி நாடாக பிரகடனம் செய்யச் செய்தவர், இந்திரா காந்தி.
அதன் விளைவாக காந்தி குடும்பத்தின் மீது அவர்களுக்கு இணக்கமான பற்று மற்றும் நன்றியுனர்வை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பர மரியாதையையும் நீடித்து வருகிறது.