இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி எம்பிக்கள்
Share
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அதிகமான இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி இருக்கின்றனர். அந்தவகையில் எப்போதும் இல்லாத அளவாக சுமார் 26 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை அலங்கரிக்க உள்ளனர்.
இதில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் முக்கியமானவர். இவர் யார்க்ஷைர் கவுண்டியில் உள்ள தனது ரிச்மாண்ட்-நார்தலர்டன் தொகுதியை தக்க வைத்தார்.
இதைப்போல முன்னாள் மந்திரிகள் சுவெல்லா பிரேவர்மன், பிரீதி படேல், கிளேர் கவுண்டினோ ஆகியோரும் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து வெற்றி பெற்றனர். மேலும் ககன் மகிந்திரா, சிவானி ராஜா உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.
ஒட்டுமொத்தமாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிதான் இந்திய வம்சாவளி எம்.பி.க்களையும் அதிகமாக பாராளுமன்றத்துக்கு கொடுத்து இருக்கிறது.
அந்த கட்சியை சேர்ந்த சீமா மல்கோத்ரா, வலேரி வாஸ், லிசா நண்டி ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்துள்ளனர். இதைப்போல பிரிட்டனை சேர்ந்த சீக்கியரான பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜீத் சிங் தேசி ஆகியோரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினரில் புதுமுகங்களும் கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.