பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்; விறுவிறுப்பாக வாக்களித்த புதுச்சேரி மக்கள்
Share
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஜூன் 30-ந்தேதி நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் தீவிர வலதுசாரி கூட்டணி 33.4% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது. தற்போதைய அதிபராக உள்ள இம்மானுவேல் மேக்ரானின் கூட்டணி 20.7% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற 289 இடங்கள் தேவை எனும் நிலையில், இரண்டாம் சுற்று தேர்தலின் வாக்குப்பதிவு புதுச்சேரியில் இரண்டு தொகுதிகளிலும், சென்னை, காரைக்காலில் தலா ஒரு தொகுதிகளிலும் நடைபெற்றது. புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.