ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்!
Share
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று (ஜூலை 8) மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி நடந்திருந்தாலும், இது தொடர்பான காணொளிகள், சமூக வலைதளங்களில் ஜூலை மாதம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது வன்முறை நீடித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ,ன்று (ஜூலை 8) மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா தெரிவித்துள்ளார்.