LOADING

Type to search

இந்திய அரசியல்

விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி – ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்

Share

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை 20 சுற்றுகளாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 9.30 மணி அளவில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு சுற்று முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 83,431, பா.ம.க. 36,341, நாம் தமிழர் 6,767 வாக்குகள் பெற்று இருந்தன. இதன் மூலம் தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவது தொடக்கத்திலேயே உறுதியானது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சென்னை அண்ணாஅறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.