LOADING

Type to search

இந்திய அரசியல்

புனே பயிற்சி அதிகாரி பெற்றோர் மீது வழக்குப்பதிவு

Share

மராட்டிய மாநிலம் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் என்ற பெண் பணியாற்றி வந்தார். இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மராட்டிய அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன் விளக்கையும் பயன்படுத்தி வந்தார். மேலும் கூடுதல் ஆட்சியர் அஜய்மோர் இல்லாத போது அவரது அறையின் முன் அறையை பூஜா ஆக்கிரமித்து கொண்ட தாகவும் புகார் எழுந்தது. இவர் மீதான புகார்களை தொடர்ந்து மாநில தலைமை செயலாளருக்கு புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவாசே கடிதம் அனுப்பினார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளையும், ஓ.பி.சி. இடஒதுக்கீட்டையும் அவர் தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க ஒருநபர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பூஜா கேத்கர் அளித்த ஆவணங்களையும், தேர்வு பெற்ற பிறகு அளித்த ஆவணங்களையும் அக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் கையில் துப்பாக்கியுடன் உள்ளூர் விவசாயிகளை மிரட்டும் புகைப்படைங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து பாட் காவல்துறை பூஜாவின் பெற்றோர் திலீப் கேத்கர்-மனோரமா கேத்கர் மீது விவசாயிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.