LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – ஜோ பைடன் கண்டனம்

Share

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தேடி வந்தனர்.  பின்னர்,  துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் பைடனின் அனைத்து பிரசாரக் கூட்டங்களும் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.