LOADING

Type to search

இந்திய அரசியல்

4 கோடி ரூபாய் விவகாரம்: நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்

Share

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி அதிகாரிகள் முன் திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ-வும், திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவருமான நயினார் நாகேந்திரன் ஆஜரானார்.

காலை 10.20 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சுமார் 6.30 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.