LOADING

Type to search

இந்திய அரசியல்

மதுரை கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்

Share

மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில் உள்ள ஶ்ரீ சுந்தரராசா பெருமாள் என்று அழைக்கக்கூடிய ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், ஆடிப் பௌர்ணமியையொட்டி நடைபெறும் தேரோட்ட விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பௌர்ணமி திருவிழா கடந்த 13ஆம் தேதி திருக்கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில், கருடன் உருவம் பதித்த கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து, ஶ்ரீகள்ளழகர் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி உற்சவ மூர்த்தியான ஶ்ரீகள்ளழகர் மற்றும் ஶ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, தேரடியில் உள்ள 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் தேவியருடன் எழுந்தருளப்பட்ட ஶ்ரீகள்ளழகருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.