LOADING

Type to search

இந்திய அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஒருபோதும் பாஜகவால் செயல்படுத்த முடியாது – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் ஓட்டுப்பதிவுக்கு வகை செய்யும் ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஒப்புதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறான ஒரு முன்மொழிவாகும். இது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதனை ஒருபோதும் பாஜகவால் செயல்படுத்த முடியாது. பாஜகவின் ஈகோவால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது. இது போன்ற திசை மாற்றும் விவகாரங்களில் தங்கள் சக்தியை மத்திய அரசு செலவிட வேண்டாம்; வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்