LOADING

Type to search

உலக அரசியல்

கருக்கலைப்பு சிகிச்சையில் பெண் மரணம்: டிரம்பின் கொள்கைகளை சாடிய கமலா ஹாரிஸ்

Share

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் கருக்கலைப்புக்கு தாமதமாக சிகிச்சை பெற்ற பெண் மரணம் அடைந்த விவகாரம், அதிபர் தேர்தலில் எதிரொலித்துள்ளது.

அமெரிக்காவில் தேசிய அளவிலான கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டங்களை கொண்டு வந்தன. குறிப்பாக ஜார்ஜியாவில் கருக்கலைப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 2 வாரங்களில் ஆம்பர் தர்மன் என்ற கர்ப்பிணி, தாமதமான கருக்கலைப்பு சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கடந்த திங்களன்று புலனாய்வு ஊடகத்தில் முதல் முறையாக வெளியானது. தாமதமான சிகிச்சையால் இறந்ததாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இந்த விவகாரத்தை அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கையில் எடுத்துள்ளார். அம்பர் தர்மனின் மரணத்தை கடுமையான கருக்கலைப்பு சட்டங்களுடன் முடிச்சு போட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்பின் கொள்கைகளை கடுமையாக சாடினார். ஆம்பர் தர்மனின் துயரமான முடிவு தொடர்பாக செய்தியாளர்களிடம் கமலா ஹாரிஸ் விளக்கமாக பேசினார். அப்போது, கருக்கலைப்பு மாத்திரையால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் 20 மணிநேரம் காத்திருந்து இறந்த ஜார்ஜியா இளம் தாயின் மரணமானது, டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகளின் விளைவுகளை காட்டுகிறது என்றார்.