அக்னி 1 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்திய ராணுவம்

Share

குறுகிய தூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை, 700 கிலோமீட்டர் முதல் 1,200 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. மேலும், 2,500 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் அல்லது அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் இதில் உள்ளது. 1979-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள அக்னி-1 ஏவுகணை, ஒடிஸா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, ஏவுகணையின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப தரநிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தச் சோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அக்னி-1 ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெற்றிகரமான சோதனை, இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>