யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுகின்றது.
அந்தவகையில் மழையினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. சூரியராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில், ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும், ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வேலணை பிரதேச செயலர் பிரிவில், ஜே/26 கிராம சேவகர் பிரிவில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>