நடிகர் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ‘டார்க்’. இந்த படத்தை கல்யாண் கே. ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கான கதையை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே. பாபு எழுதியுள்ளார். நடிகை அஞ்சனா முருகன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், இயக்குநர் கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்ஜி ஸ்டூடியோஸ் மற்றும் 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகளும், அதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன. ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில், பல அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக ‘டார்க்’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தற்போது ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
அஜய் கார்த்தி நடித்த “டார்க்” படத்தின் முன்னோட்டம் வெளியானது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>