அஜித்குமாரை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் ‘குட்​பேட் அக்​லி’ படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது. அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல்​வேறு நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது அணி​யினருடன் கலந்து கொண்ட அவர் 24 ஹெச் சீரிஸ்- மத்​திய கிழக்கு டிராபிக்​கான பந்​த​யத்​தில் கலந்​து​கொண்​டிருக்​கிறார்.

தற்போது துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். ரேசிங் ஒருபக்கம், ரசிகர்கள் ஒருபக்கம் என சமூக வலைத்தளங்களில் அஜித் குமார் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமாரை சந்தித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>