கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் பில்லா. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ‘பில்லா’ திரைப்படத்தில் நமீதா, நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித்குமார் இரட்டை வேடத்தின் நடித்த இப்படம் 1980ல் ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தின் மறுபதிப்பு ஆகும். இப்படத்திற்கு பிறகு தான் அஜித்தின் ஸ்டைலும், நடிப்பும் அடுத்தகட்டத்துக்கு சென்றது. அஜித்தின் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக இப்படம் அமைந்தது. இந்த படம் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்குகளில் வருகிற மே 1ந் தேதி மறு வெளியீடு செய்யப்பட உள்ளது. நவீன 4கே தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ திரைப்படம் மறு வெளியீடு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>