அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு திரும்ப பெற்றார். பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை ‘ திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரது சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டார். அதில் குறிப்பாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் உள்ளதாகவும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தனது பெயருக்கும், குடும்பத்தினர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்தார். இந்த வழக்கு சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17- வது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 26-ம் தேதி நடந்த விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலையே குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து வழக்கு 30-ம் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை டி.ஆர். பாலு திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு திரும்ப பெற்றார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>