‘அண்ணாமலை விலகியதால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லையென நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்

Share

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில்  விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை பா.ஜ.க தலைமை உறுதி செய்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது; “பா.ஜ.க. என்பது நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல. இது சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட கட்சி. அண்ணாமலை விலகியதால் பா.ஜ.க.வுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டிற்குப் போனாலும், தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ் மக்களின் பெருமைகளைப் பற்றியும் பேசுகிறார். தமிழ் செப்பேடுகளை மீட்டு வந்திருக்கிறார். தமிழ் மக்கள் மீது பா.ஜ.க. என்றும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அது ஜனநாயக உரிமை. அண்ணாமலை தொடங்கிய இயக்கம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>