அதிசியப் பிறவி பவான் அவர்களுக்கு 56வது பிறந்த நாள் வாழ்த்து | அமரர். சத்தியவான் சத்தியசீலன் (பவான்)

Share

(பிறந்த இடம் : ஊர்காவற்றுறை சுருவில் ஐயனார் கோவிலடி

வாழ்ந்து மறைந்த இடம்: ஸ்காபுறோ, கனடா)

வானுறைந்தும் ஒளிவீசும் எம் குடும்பத்தின் குத்து விளக்கே!
வுற்றாத அன்பு கொண்டவராய் எம்மோடு நாற்பத்தி ஏழு ஆண்டுகள் வீற்றிருந்தாய்
ஒரு இளைய ராஜாவாய்
அதிசியப் பிறவி அல்லவா நீ. ஒரு ‘லீப்’ வருடத்தில் மாசி 20ம் நாள்
உன் அன்னையின் மடியில் வந்துதித்தாய்
உன் பிறந்த நாளுக்காக நாமும் உன் நண்பர்களும் நான்கு வருடங்கள் காத்திருந்து
அதிசியமும் மகிழ்ச்சியும் இணைந்து அல்லவா அனுபவித்தோம்?
இன்று, நீ இல்லாத இவ்வுலகில் மீண்டும் பிறந்தது உந்தன் ‘லீ” மாதம்
அதுவே உந்தன் ஐம்பத்தைந்தாவது ஜனன தினம்
உன் இறப்பின் துயரம் இன்னும் எங்கள் இதயத்தோடு ஒட்டியிருக்க
உன் பிறப்பின் இரசியம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தோன்றி எம்மைத்
தேற்றிவருகின்றது.
அடுத்த லீப் வருடத்திற்காக நாம் ஆவலுடன் காத்திருப்போம்!

இங்ஙனம்
உந்தன் குடும்ப உறவுகளும் நண்பர்களும்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>