அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகினார்

Share

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பிரபல திரைப்பட நடிகை கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “தற்போது உள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையிலும், கணத்த இதயத்துடன் என்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் விடுவித்துக் கொள்கிறேன்” என்று கௌதமி குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுகவில் இணைந்த நாள் முதல் இன்று வரை தனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, வட்ட, பகுதி, ஒன்றிய, பேரூர் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் மனதார வணங்கி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இக்கடிதத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>