தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனிடையே, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு என 2 தரப்பாக பிளவு பட்டுள்ளது. இதில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பில் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். அவரை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று வரவேறனர். இதையடுத்து, சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய்யை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.
அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் அலுவலகம் சென்ற முதல் – அமைச்சர் விஜய்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>