கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமாகாவுக்கு பட்டுக்கோட்டை, திரு.வி.க.நகர், ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு இடத்தில் கூட தமாகா வெற்றி பெறவில்லை. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும் நிலையில், இந்த முறை 8 தொகுதிகளை கேட்டு வருகிறதாம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது தமாகா போட்டியிட விரும்பும் 12 தொகுதிகள் பட்டியலை அவரிடம் வழங்கியுள்ளார். அதில் 8 தொகுதிகள் ஒதுக்கித்தருமாறும் கேட்டுக்கொண்டார். அப்போது, ஜி.கே.வாசனுடன் சென்ற தொழிலதிபர் ஒருவர், ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட்டும் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்குவதாகவும், ராஜ்யசபா சீட்டை அடுத்த ஆண்டு தருவதாகவும் தெரிவித்துவிட்டாராம். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு ஜி.கே.வாசன் கடிதமும் எழுதியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் 8 தொகுதிகளை கேட்கும் ஜி.கே.வாசன்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>