அந்தோணி இயக்கி நடித்த ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படம் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகிறது

Share

இயக்குநர் டி. அந்தோணி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மனதை வருடும் காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் டி. அந்தோணியுடன், மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘தேடல் தொடருதே..’ லிரிக்கல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான முன்னோட்டமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்டென்ஸ் ரொமான்டிக் மற்றும் உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம்  இளைஞர்கள் மற்றும் காதல் திரைப்பட ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>