அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

Share

திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு. அவதூறு பேசி – பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும்தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் – கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>