பேரவையின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவிப்பு
அது தொடர்பான ஒரு ஊடகச் சந்திப்பு! 24-09-2026
‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ (Classical Tamil and Tamils in the Era of Artificial Inteiligence) என்னும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15, 16, 17, 18ம் திகதிகளில்- நான்கு நாட்கள்-கனடாவில் ரொறன்ரோ மாநகரில் நடைபெறவுள்ள மேற்படி சர்வதேச மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு ஒன்று 24-09-2026 அன்று வியாழக்கிழமை மாலை மார்க்கம் நகரில் 80 Travail Road Unit-1 Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. சந்திப்பிற்கான பிரதான மேசையில் நிமால் விநாயகமூர்த்தி உட்பட பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் பேராசிரியர் .. பாலசுந்தரம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ராகவன் பரஞ்சோதி அவர்கள் சந்திப்பை தொகுத்து வழங்கினார்ட. அத்தடன் அனைத்துலக தமிழர் பேரவையின் அமைப்பாளர்களில் ஒருவரான கென் கிருபா அவர்களும் அங்கு உரையாற்றினார.
தனது தலைமையுரையை ஆரம்பிக்கும் போதே நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் நம்பிக்கை ரேகைகள் முகத்தில் படர்ந்திருக்கும் புன்னகையோடு கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த மாநாட்டு ஏற்பாடுகளுக்கு சிரத்தையோடு ஆதரவை வழங்கிவரும் பல தரப்பட்ட ஊடகங்களுக்கு நன்றி கூறி மற்றும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் கடந்த நான்கு மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அத்துடன் அனைத்துலக தமிழர் பேரவை கனடாவில் ஒக்டோபர் மாதத்தின் நான்கு நாட்களாகிய 15, 16, 17, 18ம் திகதிகளில்- -நடத்தவுள்ள சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் எனவும் அறிவு சார்ந்த ஒரு நான்கு நாள் மாநாட்டை நடத்துவதில் உள்ள சிரமங்களையும் சவால்களையும் எமது கனடிய தமிழ்ச் சமூகமும் புலம் பெயர் தமிழ்ச் ச மூகமும் நன்கு உணர்ந்து தங்கள் ஆதரவைத் தரவேண்டும் என்றும் அன்போடு வேண்டிக் கொண்டார். அத்தடன் மிகுந்த பொருட் செலவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு நிதி அன்பளிப்புக்கள் மற்றும் பிரதான அனுசரணையாளர்களாக கரங்களைக் கோர்த்துள்ள புரவலர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் பேராசிரியர் .. பாலசுந்தரம் ஆகியோர்
தங்கள் உரைகளின் போது மாநாட்டுக்காக தங்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க அதிகளவு கட்டுரைகள் கிட்டியுள்ளதால் அவற்றிலிருந்து பொருத்தமான கட்டுரைகளை தேர்ந்தெடுத்தல் என்ற பணி தங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.
எனினும் ஓக்டோபர் மாதம் நடைபெறவுள்ள எமது மாநாடு உலகளவில் பேசப்படும் ஒன்றாகவும் அத்துடன் செம்மொழியாம் எம் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அதிக பயன் தரும் ஒன்றாக அமையும் என்று நம்பிக்கையையும் முன் வைத்தனர்.
மேற்படி ஊடகச் சந்திப்பில் அச்சு ஊடகம்-தொலைக் காட்சி- வானொலி- சமூக ஊடகங்கள்- இணையவழி ஊடகங்கள்- கட்டுரையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து சிறப்பித்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்