அபிநயா நடிக்கும் ‘இரட்டையர்’ படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது

Share

‘நாடோடிகள்’ புகழ் அபிநயா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட களத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்க, அந்த விபத்தில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பும் தாயின் விநோதமான நடத்தைகள், அவரது இரட்டை பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்க தொடங்குகிறது. இதன்பின்னர் அவர்கள் அந்த மர்மங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். அதன்பிறகு நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படத்தில் இரட்டை குழந்தைகளின் தாயாக அபிநயா நடித்துள்ளார். இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சுப்ரமணிய சிவா, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களி நடித்துள்ளனர். திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. வெறும் 21 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ‘இரட்டையர்’ படம் ஜூன் மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>