அமரர் பியூஸ்லஸ் வெற்றிக்கிண்ணம்:- வெற்றி வாகை சூடியது ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம்.

Share

(மன்னார் நிருபர்)

(7-03-2023)

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை நாயகன் அமரர் பியூஸ் லஸ் அவர்களின் முதலாவது வருட ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையுடன் மாந்தை பிரதேச விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இதன் போது ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மாவிலங்கேணி அலோசியஸ் அணியினை 5:0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.

அதனை தொடர்ந்து உப்புக்குளம்,அல்பதா அணியை 2:0 என்ற கோல்கள் அடிப்படையில் காலிறுதியில் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் எமில் நகர் இருதயநாதர் அணியை 4:0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதியாட்டம் நேற்று திங்கட்கிழமை(6) மாலை இடம்பெற்றது.

ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழக அணியும், பனங்கட்டிக்கொட்டு சென். ஜோசப் அணியும் மோதியது.

ஆட்டம் நிறைவுற்ற வேளையில் இரு அணிகளும் தலா ஒரு கோலினை போட்டு 1:1 என்ற கோல் அடிப்படையில் தண்ட உதை வழங்கப்பட்டது.

தண்ட உதையில் ஐக்கிய விளையாட்டுக் கழக அணி 7: 6 என்ற கோள்களின் அடிப்படையில் வெற்றியீட்டி அமரர் பியூஸ்லஸ் நினைவு கிண்ணத்தை தமதாக்கி கொண்டது .

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>