அமீர் நடிக்கும் “மாகாளி” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது

Share

அமீர் நடிக்கும் ‘மாகாளி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது தனது அடுத்த படைப்பான ‘மஞ்சணத்தி’ படத்தை இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் தனது மனைவி திவ்யா மாரி செல்வராஜுடன் இணைந்து நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மாகாளி’ என பெயரிடப்பட்டுள்ளது. மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி.அரவிந்த், ‘மாகாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்வாசிகா மற்றும் அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘மாகாளி’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ‘மாகாளி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>