மனித நேயத்தைக் காட்டி நிற்கும் இலங்கையும் இந்தியாவும்!
தாக்குதலுக்கு உள்ளான கப்பலிலிருந்து 32 ஈரானியர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி!.
மற்றுமோர் ஈரானிய கப்பலில் 300 300 படையினருக்கு உணவு , நீர் உதவி தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உதவியை வழங்க இந்தியா முன் வந்துள்ளது!
ந.லோகதயாளன்.
காலிக் கடலில் உயிரிழந்த ஈரானிய கடற்படையினரின் உடல்களை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலித்துறைமுகத்தில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் பயணித்த ஈரானிய கப்பல் மீது அமெரிக்க கப்பல் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானியர்களின் உடல்களை இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் காலி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட 84 உடல்களும் இன்று உடற்கூற்று பரிசோதணைக்கு உட்படுத்தப்படவுள்ளது. பரிசோதணையின் பின்னர் ஈராணிய அரசிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் இக் கப்பலில் இருந்து 32 ஈரானியர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகர்த்து மீழ்கப்படிக்கப்பட்ட கப்பலில் 180 பேர் பயணித்ததாக முன்னர் செய்திகள் வெளியானபோதும் அக் கப்பலில் 132 பேரே பயணித்தனர் என தற்போது கூறப்படுகின்றது.
இதேநேரம் ஈராணின் மற்றுமோர் கப்பலில் 300 பேர் உள்ளதாகவும் அவர்களிற்கு உணவு , நீர் உதவி தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவியை வழங்க இந்தியா முன் வந்துள்ளது.