அமெரிக்காவில் துப்பாக்கி சூடு- 3 காவல்துறை அதிகாரிகள் மரணம்

Share

அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை காவல்துறை கைது செய்ய சென்றனர். அப்போது காவல்துறை மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 காவல்துறை அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>