அமெரிக்காவின் மாகாணம் பொல்டர் நகரில் பெர்ல் தெருவில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அமெரிக்கா வாழ் இஸ்ரேலியர்கள், யூதர்கள், இஸ்ரேல் ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றனர். இந்நிலையில், பேரணியின்போது திடீரென பெட்ரோல் குண்டுகளுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீப்பற்றி எரிந்தன. இதில் பேரணியில் பங்கேற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். ‘பாலஸ்தீனம் விடுதலை’ என்ற கோஷம் எழுப்பிய நபர் இந்த தாக்குதலை நடத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய முகமது சுலைமான் (வயது 45) என்ற நபரை கைது செய்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்று காவல்துறை அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்: 6 பேர் படுகாயம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>