அமெரிக்காவில் போயிங் ரக விமானத்தில் பழுது: அவசர தரையிறக்கம்

Share

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதைக்கவனித்த விமானிகள், உடனடியாக வாஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விமானிகள் ” மே டே” அறிவித்தனர். மே டே என்பது விமானம் கடுமையான ஆபத்தில் இருக்கும்போது பயன்படுத்தப்படும் சர்வதேச அவசர அழைப்புச் சொல் ஆகும். மேடே அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் அனுமதி கொடுத்தனர். இதனால் மீண்டும் வாஷிங்டன் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>