அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சலாடோ பகுதியருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் வகையை சேர்ந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில், 2 ராணுவ வீரர்கள் பயணித்தனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென வயல்வெளியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில், அதில் இருந்த புற்கள் பெரிய அளவில் தீப்பிடித்து கருகின. உடனடியாக தகவல் அறிந்து அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சென்றனர். எனினும் 100 ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவி சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் இருந்த 2 வீரர்கள் பலியானார்கள். வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி ராணுவம் வெளியிட்ட செய்தியில், விபத்தில் சிக்கி 2 வீரர்கள் பலியானார்கள் என்ற தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த விவரம் அவர்களுடைய உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. அதுவரை அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படாது என தெரிவித்தனர்.
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>