அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த முக்கிய பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் தகவல்

Share

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மிக முக்கியமான ரக சிய பேச்சுவார்த்தை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. துருக்கியில் நடைபெறுவதாக இருந்த இந்த பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு மந்திரி அப் பாஸ் அரக்சியின் கோரிக்கையைத் தொடர்ந்து ஓமனுக்கு மாற்றப்பட்டது. மஸ்கட் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஒரு பிரமாண்ட அரண்மனையில் இந்த ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதலில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவினர் அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதியைச் சந்தித்துப் பேசினர். இதனை தொடர்ந்து அமெரிக்கத் தூதுக்குழுவினர் நுழைந்தனர். அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் இந்த முக்கியப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். சுமார் 14 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>