ஈரானின் நீதித்துறையின் கீழ் செயல்படும் சட்ட மருத்துவ அமைப்பின் தலைவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்த போரில் ஈரானில் 3,375 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார். ஈரான் – அமெரிக்கா போரால் 3,375 பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்களும், 496 பேர் பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் பெரியவர்கள் அல்லது குழந்தைகள் என்பதைக் குறிப்பிட்டு விவரம் அளிக்கப்படவில்லை என்றும் ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் தொடுத்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையே பதற்ற நீலை நீடிக்கிறது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>