அமெரிக்கா தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலியாகினர்

Share

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலியாகினர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 7-ந்தேதி வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை. இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்றும் தெரிவித்தது. இந்த சூழலில், இதற்கு ஈரானை பொறுப்பேற்க செய்யும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலியாகி உள்ளனர். 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை ஈரான் அரசு தரப்பில், அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் தெரிவித்து உள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>